Medicare
மருத்துவக் கவனிப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் முக்கியமான இரண்டு மருத்துவ திட்டங்கள் medicaid என்ற மருத்துவ உதவியும், medicare என்ற மருத்துவ கவனிப்பும். medicaid என்பது குறைந்த வருமானப் பிர்வினருக்கான அதுவும் தகுதிச் சோதனைகள் மூலமாத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கானது. medicare என்பது மருத்துவக் காப்பீட்டிற்கு இணையானது. தொடர் சந்தா (பிரீமியம்), செலுத்தியவர்களுக்கு, 65 வயதிற்கு மேல் இந்தக்காப்பீட்டு உதவி கிடைக்கும் சில நோய்களால் பாதிப்படைந்தவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். சில நேரங்களில் இரண்டு திட்டங்களின் மூலமாகவும் பயன் பெறலாம்.
பார்க்க: medicaid - மருத்துவ உதவி - மருத்துவமனை சென்று சிகிச்சை பெற செலவழிக்க இயலாதவர்கள் என்று தகுதிச் சோதனைகள் மூலம் (குறைந்த வருவாய்ப் பிரிவினர்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசே மருத்துவச் சிகிச்சைக்கான செலவினங்களைத் தந்துதவும் திட்டம். சுகாதாரப் பணிகள் நிதியத்தின் மேற்பார்வையில் அமெரிக்காவின் மத்திய, மாநில அரசுகளின் நிதிஉதவியுடன் உள்ளாட்சி அமைப்புகள் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துகின்றன. துணை வருமானப் பாதுகாப்புத் திட்டப் பயனாளிகள், அந்தந்த பகுதி சமூகப்பாதுகாப்பு அலுவலகங்கள் மூலம் இந்தத் திட்டத்தின் பயனைப் பெறுவர்.

English
The national social insurance health care program for older people, established in 1965 and administered through the Social Security Administration (SSA); the Health Care Financing Administration (HCFA); and to some extent, in certain localities, with the assistance of some commercial and nonprofit health insurance companies. Funding comes from employer-employee contributions as part of the individual's social security, from earmarked taxes, and from general federal revenues. Eligibility is not based on need but on reaching age 65.