medipards

மருத்துவக் கவனிப்பு வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்க இசைவு தந்தவர்கள்

தமிழ் விளக்கம்

மெடிகேர் (மருத்துவக் கவனிப்பு) காப்பீடு அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தால், காப்பீடு நிறுவனங்கள் தரும் சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதோடு மட்டுமல்ல, அதைப் பெறுவதற்கான எழுத்துப்பணி (சான்றுகள் சமர்ப்பித்தல்) அதிகம் என்பதால், மருத்துவப் பணியிலிருப்பவர்கள் பெரும்பாலும், மெடிகேர் அட்டைதாரர்களுக்கு சேவையளிக்கத் தயங்குவார்கள், இதற்கு மாறாக மெடிகேர் அட்டைதாரர்களுக்கு சேவையளிக்க முன்வரும் மருத்துவப் பணியாளர்கள் மெடிகேர் நண்பர்கள் (medipards) என்றழைக்கப்படுகிறார்கள். மெடிகேர் அட்டைதாரர்களுக்கு சேவை வழங்கும் மெடிபார்ட்ஸ் மருத்துவப் பணியாளர்களின் பட்டியல் அந்தந்த வட்டார சமூகப்பாதுகாப்பு அலுவலகங்களிலும் அல்லது முதியோர் மையங்களிலும் வைத்திருப்பார்கள்.

English

Physicians and other health care providers who accept assignment of Medicare payments. Many health care providers consider Medicare payments to be less than their services are worth and the required paperwork to get reimbursed is so great, they decline to accept assignment to serve Medicare-eligible patients. Medicare thus provides a medipard directory listing those providers who will accept assignment; it is available at district social security offices or senior citizens centers.