meditation

தியானம்

தமிழ் விளக்கம்

தியானம் என்பது ஒருவகையான மனப்பயிற்சி. தியானம் என்பது தன்னைதானே உற்றுநோக்குதலாகும். தியானத்தின் போது ஒருவர் தன் மனதின் உள்ளடக்கத்தை அதோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல் பார்க்க முயலுகிறார். தன்னைதானே காணும் இந்தப் பயிற்சி மனதைத் தளர்வாக்கி, நல்லுணர்வுகளை வலுவாக்கி, மன அழுத்தங்களிலிருந்து விடுவிக்கும். பலவிதமான நன்மைகளைப் பெற பலவகையான தியான முறைகள் பழக்கத்திலிருக்கின்றன. உடம்பையும் மனதையும் தளர்வாக்க, அகச் சக்தியை வளர்க்க, கருணையை வளர்க்க, அன்பு, அமைதி ஏற்பட, மனம் குவிய என்று எந்த நோக்கத்திற்காகவும் தியானம் செய்யலாம். பலவைகயான தியானமுறைகள் வழக்கிலிருந்தாலும், மகரிஷி மகேஷ் யோகியால் பயிற்றுவிக்கப்பட்ட ஆழ்நிலைத் தியான முறை உலகில் அதிக நபர்களால் பயிற்சி செய்யப்பட்ட முறையாக ஆனது. இதில், வசதியான நிலையில் அமர்ந்துகொண்டு, பொருளற்ற ஒரு மந்திரத்தை, ஒவ்வொரு நாளும், காலை மாலை குறைந்த பட்சம் 20 நிமிடங்களுக்கு மனதில் நினைத்துக் கொண்டிருக்கவேண்டும். இந்த தியான முறை உடல்நல்ம், உளநலம், ஆளுமைத்திறன் வளர்ச்சி போன்ற கூறுகளில் வியத்தகு பலன்களை அளிப்பதாக பல ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன

English

A state of concentrated relaxation, the systematic practice of which reportedly leads to feelings of heightened well-being and reduced anxiety. Meditators typically concentrate on and repeat a word, phrase, or sound (for example, a mantra) for about 20 minutes while remaining in a passive attitude, in one comfortable position, and in an environment free of distractions.