Megan's Law

மேகன் சட்டம்

தமிழ் விளக்கம்

மேகன் கண்க (Megan Kanka 1986 – July 29, 1994) என்ற சிறுமி, அச் சிறுமியின் வீட்டாருகே குடியிருந்த ஜெஸ்ஸி டிமந்திகிஸ் என்ற ஏற்கனெவே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்றவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அமெரிக்கா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஜெஸ்ஸி டிமந்திகிஸ், அந்தக் குடியிருப்பில் வசிப்பதும், காவல் துறை அவரைக் கண்காணித்து வந்ததும், குடியிருப்பு வாசிகளுக்குத் தெரியாதிருந்தது. இந்த அறியாமையை பயன்படுத்தியே ஜெஸ்ஸி டிமந்திகிஸ் மீண்டும் குற்றமிழைத்ததால், இந்த மாதிரியான குற்றவாளிகள் எங்கு குடியேறினாலும் அது காவல் துறைக்குத் தெரிய வரும்போது, அந்தக் குற்றவாளியைப் பற்றி புகைப்படத்துடன், இணையத்தின் மூலமாகவோ, பத்திரிகை மூலமாகவோ, பிற வகையிலோ சமுதாயத்திற்குத் தெரியப்படுத்தவேண்டும் என்று சட்டமியற்றப்பட்டது. அந்தச் சட்டமே மேகன் கண்க சட்டம் என்று பெயர் பெற்றது.

English

Federal, state, or local legislation requiring law enforcement authorities to notify residents when a convicted sexual offender moves into their community. These statutes are named after a young girl who was sexually assaulted and killed by a convicted sexual offender; the law enforcement authorities knew of his presence in the community but had not informed the residents.