member assistance programs (MAPs)
உறுப்பினர் உதவித் திட்டங்கள்
தமிழ் விளக்கம்
சில தொழிற்சாலைகள் நடைமுறைப்படுத்தும் பணியாளர் உதவித் திட்டங்களை (பணியாளர்களின் பணித்திறனைப் பாதிக்கும் உடல் மனநலப் பிரச்சனைகள், பணியிட உறவுகள், பணியின் மீதான கவனத்தைத் திசைதிருப்பும் குடும்ப நிகழ்வுகள் / பொறுப்புகள், நிதிநிலைமை மற்றும் பிற சிக்கல்கள் போன்றவற்றில் பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லவும், முடியும் பட்சத்தில் அதைத் தீர்க்கவும் நிறுவனங்கள் செய்யும் ஏற்பாடு) அமல்படுத்தப்படாத தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காக, பணியாளர் உதவித் திட்டங்களை முன்மாதிரியாக வைத்து, தொழிற் சங்கங்கள் தங்களுடைய உறுப்பினர்களுக்குச் செய்துதரும் உறுப்பினர் உதவித் திட்டங்கள். இந்த மாதிரியான உறுப்பினர் உதவித் திட்டங்களால் உறுப்பினர்களின் விசுவாசத்தை அதிகரித்து, அவர்களுக்கு தொழிற்சங்கப் பணிகளில் ஆர்வமேற்படுத்த தூண்டும்.
English
Labor union-sponsored services for workers using the employee assistance programs (EAPs) model. MAPs were originally developed by unions whose members worked for companies without EAPs to provide them with needed social services and also to develop more membership loyalty by providing this benefit. As with EAPs, MAPs often include such social services as counseling for alcohol dependence and drug dependence, marital therapy, and career counseling.