membership theory

உறுப்பினர் கோட்பாடு

தமிழ் விளக்கம்

(பல்வேறு உறுப்புகள் கொண்ட) உடலியல் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதை உணரும் போது கிடைத்த ஞானம், மனிதர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் தொடர்பு கொள்வதால் விரிவாகும் அகம், தங்கள் மனதில் குழந்தைப் பருவத்தில் பிம்பங்களாகப் படிந்துவிட்டவர்கள் ஏற்படுத்தும் தாக்கம், அறிந்ததை, அறிய நினைப்பதை, அறிந்துகொண்டவற்றை குறியீடுகளாக்கும் தன்மை போன்ற பலகருத்துக்களின் கலவையாக சமூகப்பணியில் உறுப்பினர் கோட்பாடு உருவாகி, சமூகப்பணி என்ற தொழில்முறை, சமூகப்பணியாளர்களை மானுடத்தின் உறுப்பினர்களாக்க உதவி இருக்கின்றது என்பதை விளக்க முயற்சிப்பதுதான் உறுப்பினர் கோட்பாடு. இந்தக்கோட்பாட்டின்படி மனிதத் தன்மையென்பது, தனிமனித பண்புகளோடு மட்டும் சம்பந்தமுடையதல்ல, அதையும் கடந்து சமுதாயம் மற்றும் சமூக வாழ்விலிருந்து உருவான அமைப்புகளின் உறுப்புகளாக, எவ்வளவு தூரம் உறுப்பினர் தன்மை பெற்றவராக இருக்கின்றார் என்பதைப் பொறுத்தே அமையும் என்று விளக்குகிறது. ஹான்ஸ் பால்க் என்பவர் வகுத்த, சமூகப்பணியில் உறுப்பினர் தன்மை என்ற கோட்பாடு, சமூகப்பணியாளரும் அவரின் வாடிக்கையாளரும் எந்தெந்தப் பொதுவெளியில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள், அவர்கள் எவ்வாறு பரஸ்பரம் கொடுத்தும், பெற்றும் கொள்கிறார்கள், தனிமனிதர்கள் என்பதைக் கடந்து சமூகத் தீர்மானங்களை எடுக்கின்றார்கள், உறுப்பினர், நிறுவனம், சமுதாயம் மற்றும் சமூகம் சார்ந்து அவர்கள் வெளிப்படுத்தும் பரஸ்பரத் தன்மை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு சமூகப்பணியாளர் என்பது சமூக உறுப்பினராக முயல்தலே என்று விளக்கிய கோட்பாடு.

English

A formal theory of social work that synthesizes physiological functioning, social interaction, object relations theory, and symbolization and that views the professional role as rendering aid in the management of human membership. Humanness, according to this theory, does not rest on individualism but is possible only through membership in the community and social structures that are derived from it. The orientation, which was first delineated by Hans S. Falck (Social Work: The Membership Perspective, New York: Springer, 1988), emphasizes the common membership of clients and social worker; the mutuality of giving and receiving; the social (rather than individualistic) nature of self-determination; and reciprocity among members, institutions, community, and society.