memory

நினைவு, ஞாபகம், அவதானம், சுமரணை, தன்னுணர்ச்சி, நினைவாற்றல், மீட்டு நினைவு, நினைவிற் கொணர்தல்

தமிழ் விளக்கம்

ஐம்புலன்களின் மூலமாகப் பெறப்படும் உணர்வுகள் மூளையை அடைகின்றன. மூளை அவற்றை வகைப்படுத்தி உணர்ந்து கொள்கிறது. இந்த உணர்வுகள் மூளையிலேயே தங்கி இருந்தால் அவை நினைவுகளாக மாறிவிடுகின்றன. தேவை ஏற்படும்போது இந்த நினைவுகளை மீட்டெடுக்கமுடியும். ஆகவே நினைவாற்றல் என்பது செய்திகளை, தகவல்களை உள்வாங்கி குறியீடுகளாக்கி, சேமித்து, தேவைப்படும்போது மீட்டெடுத்து பயன்படுத்திக்கொள்ளும் செயல்முறையைக் குறிக்கும். இங்கு செய்திகள் தகவல்கள் என்பது நம்முடைய அனுபவங்களையும், கற்றுக்கொண்டதையும் குறிக்கும்.

English

The mental function of recalling or reproducing what has been experienced or learned.