memory recovery therapy

நினைவு மீட்பு சிகிச்சை

தமிழ் விளக்கம்

வலிதரும், கசப்பான நினைவுகளை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனதுள் அடக்கி வைப்பதும் (Repression), சில நினைவுகளை மூடிமறைத்து வெளியிடாது பூட்டி வைப்பதும் (Suppression), காலப்போக்கில் மனநோய்களுக்கு வித்திடுமாதலால், அந்த நினைவுகளை மீட்டெடுத்துச் சரியாக்க அல்லது நினைவிலிருந்து அகற்ற வேண்டுமென்பதற்காக கையாளப்படும் உளப்பிணி சார்ந்த சிகிச்சை முறையே நினைவுகளை மீட்டெடுக்கும் சிகிச்சை எனப்படுகிறது. இது அறிதுயில் நிலை (Hypnosis), பட விளக்கங்கள், மயக்க ஊசிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி பேட்டி காணும் முறை. இந்த முறையைக் கையாண்டு குழ்ந்தைப்பருவ அடக்குமுறைகள், புறக்கணிப்புகள், பாலியல் முறைகேடுகள் போன்ற மீட்டெடுக்கப்பட்ட நினைவுகள், பெற்றோர் மீதும், அந்த நினைவுகளை ஏற்படுத்தியவார்கள் மீது ஆத்திரம் கொள்ளவைத்து, உறவுகளைச் சீர்குலைத்ததாகையால், வாடிக்கையாளர் மனதில் நடக்காத ஒன்றை நடந்ததாக திணித்ததால், சிகிச்சையாளர் கற்பனையைக் கொண்டு எதார்த்தத்தை இட்டு நிரப்பியதாக வழக்குத் தொடுக்க ஆரம்பித்ததால், இச்சிகிச்சை முறையானது மேலும் விவாதத்திற்கு உள்ளாகியது.

English

A form of psychotherapy oriented to retrieving parts of a client's forgotten past experiences that had been concealed from consciousness by suppression or repression. This type of intervention has become controversial because, as a result of it, many clients have accused parents or others of child molestation or sexual abuse. The person thus accused has often blamed and sued the therapist for inserting false memories into the client. See also false-memory syndrome.