menarche

மாதக்கழிவுத் தொடக்கம், பூப்படைதல், பெண்மையடைதல், முதல் மாதவிடாய், மெனாக்கி, மலரல், பூப்பு

தமிழ் விளக்கம்

முதன் முதலாய் மாதவிடாய் ஏற்படும் உடலியல் செயல்பாடே மெனார்க்கே (menarche) எனப்படுகிறது. இது பூப்படைதலின் ஒரு அங்கம். பூப்படைதல் என்னும் உடல்செயல்பாடு இன்னும் பல மாற்றங்களை உள்ளடக்கியது. பூப்படைதல் என்ற செயற்பாடு, ஹார்மோன்களால், முதலில் மார்பக வளர்ச்சியில் ஆரம்பித்து, பெண் உறுப்புக்குமேல் மற்றும் அக்குள் பகுதிகளில் பெரியவர்களில் காணப்படுவது போன்ற முடி வளர்ச்சி ஏற்பட்டு, இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளின் பருமன் அதிகரித்து, இந்த உடலியல் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று 8 வயதில் ஆரம்பித்து 14 வயதில் பொதுவாகப் பூப்படைதல் நிறைவுபெறும்.

English

The biological process that occurs in young women as menstruation begins.