meningitis
மூளையழற்சி, மூளைக்காய்ச்சல், மூளைச்சவ்வு வீக்கம், மூளை உறையழற்சி
தமிழ் விளக்கம்
பாக்க்டீரியாக்கள் அல்லது வைரஸ் கிருமிகளால் மூளை, நரம்பு மண்டலத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கமேற்பட்டு, பாதிக்கப்படுவதை மூளைக் காய்ச்சல் என்கிறோம். இந்த மூளைக்காய்ச்சல் நோய் பெரும்பாலும் குழந்தைகளுக்குத்தான் ஏற்படுகிறது. மூளையைப் பாதிக்கும் வைரஸ்களான தாவாட்டி அம்மை, மணல்வாரி அம்மை, ரூபெல்லா, சைட்டோ மெகாலோ வைரஸ், எப்ஸ்டீன் வைரஸ், பாக்ஸ் வைரஸ், ஈக்குன் வைரஸ், ரேபிஸ் வைரஸ், டெங்கு வைரஸ் நோயின் தீவிரத்தை தீர்மானிப்பவை. நோய்க் கிருமிகளின் வீரியம், நோயாளியின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புத் திறன், மூளையில் உள்ள நீரின் அழுத்தம் ஆகியவைதான் மூளைக்காய்ச்சல் நோயின் தீவிரத்தை தீர்மானிக்கின்றன. அதிகமான காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூளை நிலைகுலைதல், நினைவிழத்தல், வலிப்பு, இதயம் மற்றும் சுவாச உறுப்புகள் செயலிழத்தல், அதிக ஆழ்ந்த மூச்சு, கண் தசை நார்கள் செயல் இழப்பு போன்றவை மூளைக்காய்ச்சல் நோயின் அறிகுறிக்களாகும்.
மூளைக்காய்ச்சல் நோயால் கை கால்கள் செயல் இழந்துபோதல், வலிப்பு, கண் பாதிப்பு, காது கேளாமை போன்ற நிரந்தரப் பாதிப்புகள் ஏற்படலாம். பல்வேறுவிதமான கிருமியொடுக்கிகள் நுண்ணுயிர்க் கொல்லிகள் (antibiotic) இந்த நோயைக் குணப்படுத்தவும், மரணத்தைத் தடுக்கவும் உதவுகின்றன.
மூளைக்காய்ச்சல் நோயால் கை கால்கள் செயல் இழந்துபோதல், வலிப்பு, கண் பாதிப்பு, காது கேளாமை போன்ற நிரந்தரப் பாதிப்புகள் ஏற்படலாம். பல்வேறுவிதமான கிருமியொடுக்கிகள் நுண்ணுயிர்க் கொல்லிகள் (antibiotic) இந்த நோயைக் குணப்படுத்தவும், மரணத்தைத் தடுக்கவும் உதவுகின்றன.
English
Bacterially or virally caused inflammation of the membranes that surround the brain or spinal cord, or both. Antibiotic drugs have greatly reduced mortality and the effects of the disease, such as paralysis, arthritis, deafness, and blindness. Symptoms of meningitis may include fever, headache, vomiting, delirium, severe rigidity in the neck and back, and convulsions.