mental cruelty

மனரீதியாக துன்புறுத்தல்

தமிழ் விளக்கம்

உடல் ரீதியான வன்முறையை உபயோகிக்காமல் மனரீதியான செயல்களால் ஒருவரைத் துன்பத்திற்குள்ளாக்கி செயலற்றவராகவோ, தற்கொலைக்கோ அல்லது விரும்பத்தாக்காத காரியங்களில் ஈடுபடுத்துவது. தம்பதிகளில் யாரேனும் ஒருவர் பிறிதொருவரை மனரீதியாக சங்கடப்படுத்தி, அவமானத்திற்குள்ளாக்கி, துயரத்திற்கும், மகிழ்ச்சியின்மைக்குள்ளாக்கி உடலளவிலோ மனதளவிலோ செயல்திறனைப் பாதித்து, மணவாழ்க்கையைத் தொடருவதில் அர்த்தமில்லை என்ற நிலைக்கு ஆளாக்கும் நிலை விவாகரத்து கோர வழிவகுக்கும். தற்போது வழக்கிலுள்ள no fault divorce முறைகளால், குற்றம் நிரூபிக்காமலே விருப்பத்தைன் பேரில் விவாகரத்து வழங்கப்படுவதால் மனத்துன்பத்தைக் காரணம் காட்டி விவாகரத்து பெறும் முறை குறைந்து வருகிறது.

English

A legal ground for divorce in many jurisdictions, in which the behavior of one spouse imperils the mental health of the other to the extent that continuing the relationship is considered unbearable.