mental health
மன நலன், மன ஆரோக்கியம்
தமிழ் விளக்கம்
மன ஆரோக்கியம் என்பது நம்மை முடங்கச் செய்துவிடக்கூடிய மனக்குழப்பங்களிலிருந்து விடுதலைபெறவும், உணர்வு ரீதியான சமநிலை கொண்டிருக்கவும், அறிவார்ந்த முடிவுகளை எடுக்கவும், அதைக் கொண்டு செலுத்தவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் அன்றாட வாழ்வின் தேவைகளைச் சமாளிக்கவும், நியாயமான சமூக எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவும் நமக்கிருக்கும் திறன் ஆகும்.
நல்ல மன ஆரோக்கியம் என்பது உற்பத்தித் திறன் கொண்டிருக்கவும், மற்றவர்களுடன் நிறைவான உறவுகளைக் கொண்டிருக்கவும், மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும், சோதனையான நேரங்களை சமாளிக்கவும் உதவுகிறது. மன ஆரோக்கியத்திற்குப் பல கூறுகள் பங்களிக்கின்றன. சுய நம்பிக்கை மற்றும் சுய அறிவு, உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி, குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் உறவுகள், நிதிநிலை, சமூக ஈடுபாடு, மனஅழுத்தத்தை சமாளிக்கும் விதம், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் போன்ற செயல்கள் நல்ல மனநலத்திற்கான அறிகுறி. குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்கு முறையற்ற வகையில் எதிர்வினை காட்டுவது அல்லது விரக்தியாக அல்லது 'ஊக்கம் குன்றியதாக (down) உணர்வது போன்றவற்றை எல்லா மனிதர்களும் சில நேரங்களில் எதிர்கொள்வார்கள். நல்ல மன ஆரோக்கியம் கொண்ட நபர்களால், இத்தகைய நேரங்களைச் சமாளிக்கவும் விரைவாக அதைக் கடந்து செல்லவும் இயலும்.

English
The relative state of emotional well-being, freedom from incapacitating conflicts, and the consistent ability to make and carry out rational decisions and cope with environmental stresses and internal pressures.