mental health team

மன நலக் குழு

தமிழ் விளக்கம்

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பல்வேறு வகையான சேவைகளைச் செய்து தரும் பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்களும் அவர்களுக்குத் துணையாக பணிபுரிபவர்களுமடங்கிய குழு. இந்தக்குழுவில், உளப்பிணி மருத்துவர்கள் தலைமையில் சமூகப்பணியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் உளப்பிணி சிகிச்சை அளிக்கும் செவிலியர் போன்றவர்கள் அடங்குவர். சில குழுக்களில் உடலியக்கம் மற்றும் தொழில் சிகிச்சையாளர்கள், மனமகிழ் சிகிச்சையாளர்கள், கல்வியாளர்கள், ஆலோசகர்கள், மன நல உதவியாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் போன்ற இன்னும் பலரும் அங்கம் வகிப்பர்.

English

Professionals and ancillary personnel from several disciplines who work together to provide a wide range of services for clients (and the families of clients) who are affected by a mental disorder. Members of such teams include psychiatrists (who usually head them), social workers, psychologists, and registered nurses. In some psychiatric facilities the team members may also include physical and occupational therapists, recreation specialists, educators, personnel and guidance counselors, psychiatric aides, volunteers, and indigenous workers. See also interdisciplinary teaming.