mental hygiene
மன நலம் / மனத்தூய்மை
தமிழ் விளக்கம்
ஆங்கிலத்தில் mental health (மனநலம்) என்ற வார்த்தைக்கு இணையாகப் பயன்படுத்தப்படும் சொல். மன ஆரோக்கியம் என்பது நம்மை முடங்கச் செய்துவிடக்கூடிய மனக்குழப்பங்களிலிருந்து விடுதலைபெறவும், உணர்வு ரீதியான சமநிலை கொண்டிருக்கவும், அறிவார்ந்த முடிவுகளை எடுக்கவும், அதைக் கொண்டு செலுத்தவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் அன்றாட வாழ்வின் தேவைகளைச் சமாளிக்கவும், நியாயமான சமூக எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவும் நமக்கிருக்கும் திறன் ஆகும்.
நல்ல மன ஆரோக்கியம் என்பது உற்பத்தித் திறன் கொண்டிருக்கவும், மற்றவர்களுடன் நிறைவான உறவுகளைக் கொண்டிருக்கவும், மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளவும், சோதனையான நேரங்களைச் சமாளிக்கவும் உதவுகிறது. மன ஆரோக்கியத்திற்கு பல கூறுகள் பங்களிக்கின்றன. அவையாவன - சுய நம்பிக்கை மற்றும் சுய அறிவு, உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி, குடும்பம், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் உறவுகள், நிதிநிலை, சமூக ஈடுபாடு, மனஅழுத்தத்தைச் சமாளிக்கும் விதம், உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்.
குறிப்பிட்ட ஒரு நிகழ்வுக்கு முறையற்ற வகையில் எதிர்வினை காட்டுவது அல்லது விரக்தியாக அல்லது 'ஊக்கம் குன்றியதாக' (down) உணர்வது போன்றவற்றை எல்லா மனிதர்களும் சில நேரங்களில் எதிர்கொள்வார்கள். நல்ல மன ஆரோக்கியம் கொண்ட நபர்களால், இத்தகைய நேரங்களைச் சமாளிக்கவும் விரைவாக அதைக் கடந்து செல்லவும் இயலும்.

English
A synonym for mental health. The term often implies efforts to develop facilities and procedures for the treatment of people with mental illness and to educate people to live in ways that foster emotional stability and psychological wellbeing. See also Clifford W. Beers.