mental retardation

மனவளர்ச்சி குன்றியவர்

தமிழ் விளக்கம்

18 வயதிற்கு முன்னதாக யாரொருவர் தன் வயதிற்கேற்ற அறிவு மற்றும் பிற திறன்களில் சராசரி வளர்ச்சியை எட்டாது, தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளமுடியாத, பிறருடன் இயல்பாக தொடர்பு கொள்ளமுடியாத, அன்றாட வீட்டுப்பணிகளை செய்ய இயலாத, தன்னைத்தானே வழிநடத்திக் கற்கவியலாத, வேலை செய்யத் தெரியாத, ஓய்வாக இருக்கமுடியாத, சுத்தமாகவும் பத்திரமாகவும் இருக்கத் தெரியாத நிலை. இது மரபியல் காரணங்களாலோ, கருவளர்ச்சிக் காரணங்களாலோ, கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளாலோ, பிரசவத்தின் போது ஏற்பட்ட பிரச்சனைகளாலோ, உடலுறுப்பு சேதத்தினாலோ, சுற்றுச் சூழல் பாதிப்புகளாலோ சமூகப் புறக்கணிப்பாலோ ஏற்படலாம். இந்த நிலையுள்ளவர்கள் நுண்ணறிவுச் சோதனையில் (intelligence quotient (IQ) 70 நுண்ணறிவு ஈவுக்குக் குறைவாகவே பெற்றிருப்பர். நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை எனக் கூறப்படும் ஆல்பிரட் பினே என்பவர் புரிந்து கொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய செயலைத் தொடர்ந்து முடித்தல், தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் போன்ற கூறுகள் நுண்ணறிவினுள் அடங்கியுள்ளன என்றார்.
இந்த நுண்ணறிவுச் சோதனைகளின் மூலம், சோதிக்கப்படும் நபரின் திறன்களை அறிந்துகொள்ள முடியும். ஒரு செயலின் அல்லது எண்ணத்தின் மறைபொருளை உணரும்திறன் (understanding abstract concepts), ஒன்றிற்கு ஒன்று கொண்டிருக்கும் தொடர்புகளை உணரும் திறன் (grasp relationships), தானிருக்கும் சூழ்நிலை பற்றித் தகவலறியும் திறன் (acquire information about the relevant environment), புதிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறன் (adapt to novel situations) போன்ற திறன்களை அறிந்துகொள்ளமுடியும். சராசரியான நுண்ணறிவு ஈவு என்பது 70-130 வரை ஆகும். இதில் 90 -110 மதிப்பெண்கள் பெற்றவர்கள் சராசரி நுண்ணறிவு கொண்டவர்களென்றும், 70 மதிப்பெண்களுக்கு குறைவாகப் பெறுபவர்களுக்கு சிறப்புக்கல்வி தேவைப்படும். இந்தச் சோதனைகளின் உபமதிப்பு சோதிக்கப்படுபவரின் மன நலத்தைப் பிரதிபலிப்பதால், உளவியல் மதிப்பீடுகளுக்கும் இச்சோதனை பயன்படுகிறது.
IQ மதிப்புகள் பல சூழல்களில் பயன்படுத்தப்படுகின்றன. கல்வி நிலையங்களில் மாணவர்களின் திறனறியவும், தேவையறியவும், பொது மக்களின் மாறிவரும் அறிவுத் திறனறியவும், பொதுமக்களின் அறிவுத் திறன் நுகர்வு, அரசியல் ஆர்வம், சமய நம்பிக்கைகள் போன்றவற்றோடு கொண்டிருக்கும் தொடர்பறியவும், பணியாளர் தேர்விலும், பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகளிலும் இது பயன்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பலநாட்டு மக்களின் சராசரி IQ மதிப்புகள் பத்தாண்டுகளுக்கு மூன்று புள்ளிகள் என்ற சராசரி வீதத்தில் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

English

Significantly below average intellectual functioning and poten- tial, with onset before age 18, resulting in limitations in communication, self-care and self-direction, home living, social and interpersonal skills, use of community resources, academic skills, work, leisure, health, and safety. It may be the result of genetic factors, embryonic development, pregnancy or perinatal problems, trauma, organ damage, or such environmental influences as social deprivation. One diagnosed with this condition has an intelligence quotient (IQ) lower than 70. Degrees of mental retardation are delineated as follows: mild retardation (IQ range of 50-70), moderate (35-50), severe (20-40), and profound (below 20). The IQ scores have a plus or minus 5 points to account for potential measurement error. DSM-IV includes mental retardation as an Axis II disorder.