mentoring

நம்பிக்கைக்குரிய அறிவுரையாளர், நல்ல நம்பகமான ஆலோசகர், ஆசான்

தமிழ் விளக்கம்

பயிற்சியளித்தல் (Coaching), கற்பித்தல் (Teaching), ஆற்றுப்படுத்தல் (counselling), வழிகாட்டுதல் (guidance) போன்ற சொல்லாடல்கள் ஒன்றுக்குப் பிரதியாக மற்றொன்று பயன்படுத்தப்பட்டாலும், அதன் அணுகுமுறைகளில் கையாளப்படும் தனிமனித உறவுகளை வைத்தே இச்சொல்லாடல்கள் வேறுபடுத்தப்படுகின்றன. எல்லாச் செயல்முறைகளிலும் அடுத்தவர் மீதான அக்கறை வெளிப்பட்டாலும், பயிற்சியளித்தலில் அந்த அக்கறை குறிக்கோளையொட்டியதாகவும், கற்பித்தலில் புதிதாக அறிந்து கொள்ளும் திறனை மேம்படுத்துவதாகவும், வழிகாட்டுதலில் பல வழிமுறைகளில் குறிப்பிட்ட ஒரு வழிமுறையைத் தேர்வு செய்ய உதவுவதையும், ஆற்றுப்படுத்தலில் மனக்குழப்பத்தால் ஏற்பட்ட செயழிலப்பை சரி செய்யும் செயல்பாடுகளைக் குறிக்கின்றன. ஆனால் mentoring (நம்பிக்கைக்குரிய அறிவுரையாளர்) என்ற சொல்லாடல், மேலேயுள்ள செயல்களை உள்ளடக்கியதாகவோ, ஒருங்கிணைந்த ஆளுமையை உருவாக்கவோ அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் உறவைக் குறிப்பதாகும். இது தனிமனித சமூகப்பணியில் (case work) வலியுறுத்தப்படும் "உறவே நிவாரணம்" என்ற நிலையோடு ஞானத்தையும் கலந்து புகட்டும், நீண்ட காலச் செயலுக்கு ஒப்பிடலாம்)

English

Coaching, Guidance, Teaching, Counselling, Mentoring are interrelated terminologies used in day to day usage. But there is a silver line separating these concepts. Concern for the others is a commonality in all these helping activities. Coaching is short term activity to teach certain skills, Teaching is used to develop cognitive skills and capabilities, Counselling is to provide support when an individual faces a personal crisis, Guidance is used to help people to make right choices. But mentoring is an activity similar to social case work which uses relationship to solve the problems. Mentoring may be inclusive of specific activities or attempt to develop an integrative personality with a personal bond. The relationship used in mentoring is important and is akin to Guru - Shisya bava. The relationship is more valued in mentoring comparing with other short term helping activities as mentioned above.