meritocracy

தகுதியடிப்படை, செயல் திறனடிப்படையில் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென்ற கோட்பாடு

தமிழ் விளக்கம்

தலைவராகத் தேர்ந்தெடுக்கபடுபவர்கள் பாரம்பரியத்தின் (வாரிசுரிமை - பிரபுத்துவம் / உயர்குடியாட்சி) அடிப்படையிலோ, சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தின் (பணநாயகம் - plutocracy) அல்லது பெரும்பான்மையினரின் விருப்பத்தின் (ஜனநாயகம் - democracy) அடிப்படையிலோ தேர்ந்தெடுக்கப்படாமல், அவர்களுடைய செயல்திறன், சாமர்த்தியம், அறிவு மற்றும் பொருத்தமான நல்லொழுக்கங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்து. தகுதி, திறமைக்கேற்ப மக்களை அங்கீகரிக்கும் சமூக நிலை. சிலநேரங்களில் தகுதி என்பது ஒருவர் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை வைத்தும், பெற்ற பட்டங்களை வைத்தும் மதிப்பிடும் முறையாகவும் சுருக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது.

English

Leadership theoretically based on achievements, talent, skill, intelligence, and other relevant virtues rather than based on inheritance (aristocracy), wealth (plutocracy), or the will of the majority (democracy). What is sometimes called "meritocracy" is merely judging candidates for leadership roles based on their performance on some test scores or paper qualifications.