metaphor
உருவகம், கவியுருவகம்
தமிழ் விளக்கம்
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. 'மலரடி' என்ற சொல் உவமை. மலர் போன்ற பாதங்கள் என்பது இதன் பொருள். போன்ற என்பது உவம உருபு. உவம உருபு இல்லாமல் அடிமலர் என்று குறிப்பிட்டால் (பாதங்களைப் போன்றே மலர்) என்றால் அது உருவகம். உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும். இது உவமை அணியின் மறுதலை. 'உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அது உருவகமகும்'. எடுத்துக் காட்டுகள்
உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
உருவக அணி - புலி வந்தான்
உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)
உருவக அணியின் வகைகள்
1.தொகையுருவகம் 2.விரியுருவகம் 3.தொகைவிரியுருவகம் 4. இயைபுருவகம் 5.இயைபிலியுருவகம் 6.வியனிலையுருவகம் 7.சிறப்புருவகம் 8.விரூபக உருவகம் 9.சமாதான உருவகம் 10.உருவக உருவகம் 11.ஏகாங்க உருவகம் 12.அநேகாங்கயுருவகம் 13.முற்றுருவகம் 14.அவயவ உருவகம் 15.அவயவி உருவகம்
ஒரு சமூகப்பணியாளர், மன அமைதியை இழந்த தன் வாடிக்கையாளரிடம், உங்கள் எண்ணங்கள் சூறாவளியைப் போன்று சுழன்றடிப்பதை என்னால் உணர முடிகிறது என்று சொல்வது அவர் மனதை உருவகப்படுத்தும் செயல்.
பார்க்க: dichos - ஸ்பானிஷ் மொழியில் சொல்லப்படும் (கேலிப் பேச்சு, சொலவடை, சரசவார்த்தை) நீதிக்கதை, பழமொழி - பாடல் வடிவிலும், பழமொழிகளாகத் தன்னிச்சையாக வெளிப்படும் ஸ்பானிய பேச்சு. இது பெரும்பாலும் மக்களின் மனப்பாங்கு, தார்மீக மதிப்புகள், நடத்தை குறித்த பேச்சாக இருக்கும். ஸ்பானீஷ் அல்லாத பிற சமூகப்பணியாளர்கள், தங்களிடம் வரும் ஸ்பானிய வாடிக்கையாளர்களை நெருக்கமாக உணரவைக்கும் பொருட்டு இந்தப் பழமொழிகளைப் பயன்படுத்துவர்.
உ.ம் அப்பியாச வித்தைக்கு அழிவில்லை, உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை, முடி உள்ள மகாராசி முன்சடை போடுவா, பின்சடை போடுவா மொட்டைத் தலைக்காரி என்ன செய்ய முடியும்?
உழக்கு அரிசி அன்னதானம் விடிய விடிய மேள தாளம், சாமியே சைக்கிள்லே போகுது பூசாரி புல்லட் கேட்டானாம் - இது போன்ற கலாச்சாரத் தொடர்புடைய பழமொழிகளைக் கையாளும் போது வாடிக்கயாளரை எளிதில் நெருங்கலாம்.

English
A type of analogy or figure of speech used to describe something to which it is not literally applicable. Metaphors are used by social workers and their clients to connote feeling and imagination as well as objective reality. For example, a social worker could describe a client as a "hurricane" to convey a variety of behavioral and personality characteristics. See also dichos.