methadone treatment
மெதடோன் சிகிச்சை
தமிழ் விளக்கம்
ஹெராயின் போதைப் பழக்கத்தை நிறுத்தப் பயன்படும், செய்ற்கையாக உருவாக்கப்பட்ட மாற்று போதை மருந்து. அதாவது முறி மருந்து. மெதடோன் உபயோகிப்பதும் பழக்கமாகும் வாய்ப்புள்ளதாக இருந்தாலும், அதன் உபயோகத்தை நிறுத்தும்போது உடல் மற்றும் உளரீதியான நலமின்மை, வாழ்க்கை நலக்குறைவு போன்றவற்றில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. மெதடோன் சிகிச்சைக்கென்று இயங்கும் மருத்துவ மனைகள், மெதடோன் உபயோகத்தை கவனமாக மேற்பார்வை செய்கிறார்கள். மெதடோன் சிகிச்சை மட்டுமல்லாது அதனுடன் இணைந்த உளவியல் ஆலோசனையும் அப்பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட உதவும்.
பார்க்க: LAMM என்பது ஆல்பா அசிடைல் மெதடால் என்ற இரசாயனக் கலவையின் சுருக்கப்பெயர். இது ஒபிய போதை மருந்துப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க உபயோகப்படுத்தப்படும் முறி மருந்து. இதன் விளைவுகள் நீடித்திருப்பதால் இது மெதடோன் என்ற மருந்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.

English
The use of the synthetic narcotic methadone to help wean addicts from heroin. However, methadone itself is addictive, even though it has less severe withdrawal symptoms. Methadone clinics give methadone to patients and supervise their use of it. For such treatment to be truly effective, it must be accompanied by psychosocial therapy. See also LAMM and naltrexone treatment.