methods in social work
சமூகப்பணியின் செயல்முறைகள்
தமிழ் விளக்கம்
சமூகப்பணியாளர்கள் தங்கள் பணிநிமித்தமாக எடுத்துக்கொள்ளும் பல்வேறு அக்கறை சார்ந்த (intervention) நடைமுறைகளைக் குறிக்க சமூகப்பணிக் கல்வியாளர்களால் பயன்படுத்தப்படும் சொல். சமூகப்பணியாளர்களின் இந்த அக்கறை பல்வேறு முறைகளில் வெளிப்படுகிறது. தனி நபர்கள் மீதான அக்கறை (interventions with individuals Social casework), குழுக்கள் மீதான அக்கறை (interventions with groups - Social group work), சமுதாயத்தின் மீதான அக்கறை (interventions with community - community organanizations), சமூக சேவகளை நிர்வகிப்பதில் அக்கறை (interventions through administration in social work) ஆய்வின் மீதான அக்கறை (interventions through research -socialwork research), திட்டமிடல் மீதான அக்கறை (interventions through planning - social planning), குறிப்பிட்ட நோயால் பிரச்சனையால் அவதியுறுபவர் மீதான அக்கறை (clinical interventions- direct clinical practice), குடும்பம் மற்றும் திருமண வாழ்வுப் பிரச்சைகளைத் தீர்ப்பதிலான அக்கறை ஐfamily and marital treatment), சமூகம் தழுவிய மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் இலக்காகக் கொண்டு செய்யப்படும் விரிவான சமூகப்பணிச் செயல்பாடு (macro / generic social work practice), தனிமனிதர்கள் மற்றும் சமூகத்தின் மீதான ஒருங்கிணைந்த அக்கறை (combined micro-macro practice) என்று சமூகப்பணி முறைகள் பல்வேறுபட்டது.
English
The specific types of interventions and other activities used by social workers in their professional practices. The term is used especially by social work educators. Social work activities that have been identified as methods include social casework, social group work, community organization, administration in social work, research, policy, planning, direct clinical practice, family and marital treatment, other micro practice, and what is called "generic social work practice, combined micro-macro."