Meyer, Carol H.
மேயர், கரோல் எச் (1924-1996)
தமிழ் விளக்கம்
மேயர், கரோல் எச் (1924-1996) - சமூகப்பணிக் கல்வியாளர். சமூகப்பணி தத்துவாசிரியர். எழுத்தாளர். சமூகப்பணிக் கல்வியின் பல பரிமாணங்களை முன்னெடுத்து வைத்தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சமூகப்பணித்துறைப் பேராசிரியர். சமூகப்பணியில் சூழியல் கண்ணோட்டத்தை முன்வைத்துக் கோட்பாடுகளையும், கல்விமுறைகளையும், அதையொட்டி பயிற்சி மற்றும் மதிப்பீடு முறைகளை விரிவாக வகுத்துக் கொடுத்தவர். பெண்ணிய சமூகப்பணி மற்றும் சமுதாய உருவாக்கக் கல்வியில் ஆர்வம் கொண்டவர். இவர் பல சமூகப்பணி இதழ்களின் ஆசிரியையாக, முக்கியமான சமூகப்பணி பாடநூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய முக்கிய புத்தகங்கள் சமூகப்பணியில் மதிப்பீடு (Assessment in Social Work Practice), நோய் சார்ந்த சமூகப்பணியும் சூழியல் கண்ணோட்டமும் (Clinical Social Work in an Eco-systems Perspective), சமூகப்பணி செய்முறை (Social Work Practice). முதலியவையாகும்.
பார்க்க: Eco-systems Perspective - சுற்றுச்சூழல் பற்றிய தொலைநோக்கு, சுற்றுச்சூழல் பற்றிய பரப்பார்வை - ஒரு சமூகப்பணியாளர் தன் வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பற்றி முழுமையாக அறிய உதவும் கோட்பாடு. இது சிகிச்சை முறையல்ல. மாறாக ஒன்றிற்கு ஒன்று சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் அதன் உட்சிக்கல்களையும் புரிய உதவி, பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு அணுகுமுறைகளைக் கையாள வழிவகுக்கும்.

English
(1924-1996) Social work educator, theoretician, and writer who advanced concepts about social work practice from the ecosystems perspective and developed theories and educational programs for in-service training, assessment, feminist social work, and community organization. She was editor-in-chief of many social work journals, including Social Work and Affilia, and was the author of many professional articles and textbooks, including Assessment in Social Work Practice, Clinical Social Work in an Eco-systems Perspective, and Social Work Practice.