mezzo practice
இடைநிலை சமூகப்பணி செய்முறை
தமிழ் விளக்கம்
சமூகப்பணி பல நிலைகளில், பல அளவுகளில் செய்யப்படுவது. இந்த நிலைகள் / அளவுகளில் செய்யப்படும் பணி / சேவை எவ்வளவு மக்களுக்கு சென்றடைகிறது அல்லது எவ்வளவு மக்களை குறியிலக்காகக் கொண்டுள்ளது என்பதை வைத்தே விளக்கப்படும். இந்த அளவுகளின் சுருக்கமும் பெருக்கமும் ஒன்றைவிட ஒன்று மேலானது என்று பொருள்படாது. மாறாக ஒரு பணி எந்த நிலைக்கு / எந்த அளவில் பொருத்தப்பாடுடையது என்பதை உணர்த்தவே. எடுத்த்க்காட்டாக தனிமனிதர்களைச் சென்றடையும் சேவை அளவில் சிறியது (micro practice). குடும்பங்களுக்கும், குழுக்களுக்கும் சமுதாயத்திற்கும் செய்யும் சேவை சற்றே அளவில் பெரியது (meso practice). நாடு தழுவிய, பெரிய இடப்பரப்பில் செய்யப்படுகின்ற, அதிக மக்களுக்குச் செய்யப்படும் சேவை அளவில் மிகப்பெரியது (macro practice). இந்த அளவுகள் / நிலைகள் ஒன்றையொன்று ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்டது. தேசிய அளவில் செய்யப்படும் (macro level) திட்டங்களின் விளவு, தனிமனிதர்களைச் சென்றடையும். தேசிய திட்டங்களின் செயலாக்கம் தனிமனிதர்களை மையப்படுத்தியே அமையும். தனி மனிதர்களுக்கு செய்யப்படும் சேவைகள், சமுதாய அளவில் பயனளித்து தேசிய அளவில் புது மாற்றங்களை உருவாக்கும். சமூகப்பணியாளர்கள் இந்த மூன்று நிலைகளிலும் பணியாற்றுகிறார்கள் .
English
Social work practice primarily with families and small groups. Important activities at this level include facilitating communication, mediation, and negotiation; educating; and bringing people together. This is one of the three levels of social work practice, along with macro practice and micro practice. All social workers engage, to some extent, in all three, even though they may give major attention to only one or two of the levels.