microenterprise
சிறு நிறுவனங்கள், குறுந்தொழில்கள்
தமிழ் விளக்கம்
குறைந்த அளவு முதலீட்டைக்கொண்டோ, குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டோ அல்லது குடும்ப உறுப்பினர்களை வைத்தோ, சிறிய அளவில் செய்யப்படும், தொழில். இது உற்பத்தி சார்ந்ததாகவோ, சேவை சார்ந்ததாகவோ இருக்கலாம். ஒவ்வொரு நாட்டிலும் அதன் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப சிறுநிறுவனங்கள் பற்றிய விளக்கமும் தன்மையும் மாறுபடலாம். இந்தியாவில் இதற்கான வகைப்பாட்டை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டுச் சட்டம் (Micro, Small and Medium Enterprises Development (MSMED) Act, 2006) விளக்கமளிக்கின்றது. 25 இலட்சத்திற்கு மேற்படாத முதலீட்டிற்குள் இயங்கும் உற்பத்தி சார்ந்தவையும், 10 இலட்சம் முதலீட்டிற்கு மிகதா சேவை சார்ந்த தொழில்களையும் குறுந்தொழில்களாக இந்திய மைய வங்கி வகைப்படுத்தியிருக்கின்றது.
English
A very small business activity, typically involving one self-employed person, that includes unlicensed child care, street-corner car washing, lawn mowing, recycling goods, and selling small products. Often those involved in such activities belong to marginalized groups and find mainstream employment opportunities very limited. See also self-employment development and Personal Responsibility and Work Opportunity Reconciliation Act of 1996.