midlife crisis

நடுவயது நெருக்கடிகள்

தமிழ் விளக்கம்

எலியட் ஜகுஸ் (Elliott Jaques) என்ற உளப்பகுப்புச் சிகிச்சை நிபுணரால் 40 வயது ஆரம்பித்து 60 வயது வரையுள்ள நடுவயது ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஏற்படும் அகமனப் போராட்டங்களை விளக்க உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை. வாழ்க்கை நெருக்கடி என்பது மனிதர்களிடம் அந்தந்தப் பருவங்களில் பொதுவாக ஏற்படும் உடல், உள்ளம் மற்றும் உணர்வு ரீதியான மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறிக்கும். இந்த நடுவயது காலகட்டத்தில் உடலமைப்பில் ஏற்படும் தளர்வுகள், பெற்றோர்க்ளின் இழப்பு, நடுவயதிற்குரிய ஆரோக்கியச் சிக்கல்கள், குழந்தைகள் கல்வி, திருமணம் போன்ற கூடி வரும் பொறுப்புக்கள், அவர்கள் அதுவரை வாழ்ந்த வாழ்விற்கான பொருளையும், இனி செல்லவேண்டிய திசையையும் மறுமதிப்பீடுகளுக்கு உள்ளாக்கி, இனி அடையவேண்டிய எதிர்கால நோக்கங்களைப் பரிசீலித்து முன்னேற்றம் காண்பதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து, அவர்கள் நிறைவேற்ற வேண்டிய சமூகப் பொறுப்புகளைச் சமாளிப்பது போன்ற செயல்கள் மனஅழுத்ததைத் தரும். சிலர் இந்த மன அழுத்தங்களைச் சமாளித்து, அடுத்த கட்டமான முதுமைப் பருவத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளத் தயாராக, சிலர் நடுவயது நெருக்கடிகளால் அலைக்கழிக்கப்படுவர்.

English

The inner conflict and, often, the changed behavior patterns that occur in some middle-age individuals who are reassessing the meaning and direction of life, questioning their future goals, examining their relative progress toward achieving their goals, and coping with social demands made on them.