midwife

செவிலி, நலம்பேணி, மருத்துவச்சி, பேற்றுத்துணைவி, பேறுகால உதவியாளர், மகப்பேற்றுத் தாதியாளர், மகப்பேறு உதவி மருத்துவச்சி; பேறுகாலப் பணிமகள், மருத்துவமாது, துணைச்செவிலி மருத்துவச்சி, குமாரவிருத்தியை, குலவிருத்தியை, திறத்தி, பிரசவம் பார்ப்பவள்

தமிழ் விளக்கம்

மருத்துவச்சி என்பவர் பேறுகாலம் பார்ப்பதை அனுபவத்தின் மூலமாகவோ, பயிற்சியின் மூலமாகவோ கற்றறிந்து அதைத் தொழிலாகச் செய்பவர். சில மருத்துவச்சிகள் கருவுற்ற காலத்திலிருந்து பிரசவ காலம் வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான ஆரம்ப சுகாதார ஆலோசனைகளையும், மருத்துவ உதவிகளையும் செய்யுமளவிற்கு பயிற்சி அல்லது அனுபவம் பெற்றிருப்பர். வளரும் நாடுகளில் பரம்பரையாக, அனுபவமாக இந்தப்பணியில் ஈடுபட்ட மருத்துவச்சிகளுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு பாதுகாப்பான பிரசவங்கள் நிகழும்படியான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

English

A nonphysician who assists a mother through the process of childbirth.