Migrant and Seasonal Agricultural Worker Protection Act
புலம் பெயர்ந்த மற்றும் பருவகால விவசாயத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்
தமிழ் விளக்கம்
புலம் பெயர்ந்து அமெரிக்காவில் பண்ணைத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களின் பாதுகாப்பிற்காக 1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம். பண்ணைத் தொழிலாளர்களை நியாயமற்று நடத்துதல், ஆரோக்கியமற்ற பாதுகாப்பற்ற வேலை, வாழ்க்கை, தங்குமிட வசதிகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கக் கொண்டுவரப்பட்ட சட்டம். இந்தச் சட்டத்தின்படி, தாங்கள் பணியிலமர்த்தியிருக்கும் ஒவ்வொரு வேலைக்காரரிடத்திலும், அவர்களுடைய உரிமைகள், சம்பளம் மற்றும் பிற சலுகைகளைப் பற்றிய விவரங்களை ஒவ்வொரு முதலாளியும் எழுத்துபூர்வமாகக் கொடுக்கவேண்டும்.
English
U.S. federal legislation (Pi. 97-470) enacted in 1983 to protect migrant farm workers from unfair labor practices or working, living, or housing conditions that are unhealthy or unsafe. The law also requires employers to inform workers, in writing, of their rights, their wages and benefits, and the length and terms of their employment.