Migrant Head Start program

புலம் பெயர்ந்தவருக்கான ஆற்றலோடு தொடங்குதல்.

தமிழ் விளக்கம்

ஆற்றலோடு தொடங்குதல் – தான் விரும்பும் அமெரிக்க சமூகம் எப்படி இருக்கவேண்டுமென்பதை விளக்க ஜனாதிபதி லிண்டன் பி ஜான்சன் அவர்களால் முதலில் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஓஹியோ பல்கலைக்கழகத்திலும் பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் 'மேன்மைமிக்க சமூகம்' (Great Society). இதனடிப்படையில் 1964 ஆம் ஆண்டு 'வறுமைக்கு எதிரான யுத்தம்' என்ற கருத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன பொருளாதார வாய்ப்புக்கான சட்டம், மருத்துவக் காப்பீடு, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, ஆற்றலோடு தொடங்குதல் (Head Start) என்று பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆற்றலோடு தொடங்குதல் என்ற திட்டத்தின் கீழ், குறைந்த வருவாயுடைய குடும்பக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்குக் கூடுதல் உதவிகள் வழங்கப்பட்டன. பொதுப் போக்கிற்கு எதிரான ஆற்றல் மற்றும் புலம் பெயர்ந்தவருக்கான ஆற்றல் என்று பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டன. இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சமூகப்பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

English

A type of Head Start program that serves children whose parents are migrant farm workers. The program coordinates and monitors the educational progress of children who may go from one geographic region to another during the time of eligibility.