migrant laborer
இடம் பெயர்ந்த / குடிபெயர்ந்த / குடியகன்ற தொழிலாளி, வலசை போனவர், எடுபட்டுப்போனவர்
தமிழ் விளக்கம்
வேளாண்மையிலோ அல்லது கட்டுமானத் துறையிலோ கிடைக்கும் குறுகிய கால அல்லது பருவகால வேலைவாய்ப்பிற்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குத் தற்காலிகமாகக் குடிபெயரும் தொழிலாளி. இது வறுமை, வேலைவாய்ப்பின்மை, வேலை தருவதில் பாரபட்சம், குறைந்த கூலி போன்ற பல்வேறு சமூக பொருளாதாரக் காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. பெரும்பாலும் சிறுகுழுக்களாகவோ அல்லது குடும்பத்தினருடனோ இடம் பெயரும் இத் தொழிலாளர்கள், முதலாளிகளால் சுரண்டப்படுவதிலிருந்து எளிதில் பாதிப்புக்குள்ளாவாரகள். அவர்களும் அவர்களின் குழந்தைகளும், கல்வி, சமூகத் திறன்கள் மற்றும் மருத்துவ வசதி போன்ற வாய்ப்புகளை எளிதில் பெறமுடியாத நிலைக்கு ஆளாவார்கள்.
English
A worker who travels from place to place to take short-term or seasonal jobs, such as those in agriculture and construction. Often such workers travel in groups, typically with their families, and are vulnerable to exploitation by employers. They and their children have limited or minimal opportunities to obtain education, social skills, and health care.