Milford Conference
மில்ஃபோர்ட் கருத்தரங்கம்
தமிழ் விளக்கம்
சமூகப்பணி என்பது முற்றிலும் வேறுபட்ட பல்வேறு தொழில்களால் கட்டமைக்கப்பட்டதா அல்லது ஒருங்கிணைந்த அறிவு மற்றும் திறன்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க சமூகப்பணியாளர்கள், சமூகசேவை நிறுவன அதிகாரிகள் மற்றும் இயக்குனர் குழுக்கள் கூடி கலந்தாலோசித்த ஆய்வுக்குழுவைக் குறிக்கும். இந்த ஆய்வுக்குழு தன்னுடைய புரிதலை சமூகத் தனியாளர் பணி - பொதுவானதும் தனிவகையானதும் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டது. 1929 ஆம் ஆண்டு அமெரிக்க சமூகப்பணியாளர்கள் சங்கத்தின் மூலமாக வெளியிடப்பட்ட இப்புத்தகம் அதன் முக்கியத்துவம் கருதி அமெரிக்க சமூகப்பணியாளர் சம்மேளனத்தால் 1974 ஆம் ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்டது. இந்தக் கருத்தரங்கு சமூகத் தணியாளர் பணி எந்தத் தளத்தில் செய்யப்பட்டாலும் அது பொதுவான அறிவுத்தளத்தையும் திறன்களையும் உபயோகப்படுத்தியாதாக சொன்னது. சமூகப்பணி பல்வேறு தளங்களில் செய்யப்பட்டாலும், அதன் இயங்கு விதிகள் பொதுவானவையாதலால், சமூகப்பணி என்பது ஒரே தொழில்முறைதான் என்று தெளிவாக எடுத்துக்கூறியதால், சமூகப்பணியாளர்களால் மில்ஃபோர்ட் கருத்தரங்கம் சமூகப்பணியின் வரலாற்றில் முக்கியமான நிகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
English
The study group, comprising social workers, agency executives, and board members, set up to determine whether social work was a disparate group of specialties or a unified profession with integrated knowledge and skills. The group published its conclusions in the book Social Case Work: Generic and Specific (New York: American Association of Social Workers, 1929 and republished by the National Association of Social Workers in 1974) and emphasized that social casework in all settings used basically the same skills and knowledge. The conference is considered by social workers to be one of the most important milestones in the history of the profession because it led to the still existing principle that social work, despite its service in a variety of settings, is one profession. See also generic-specific controversy.