mind
உள்ளம், மனம், சித்தம், உள்ளகம், அகம், புத்தி
தமிழ் விளக்கம்
மனம் (mind) என்பது, சிந்தனை, உணர்ந்தறிதல், உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. மனம் என்பது என்ன, அது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பான கோட்பாடுகள் நிறையவே உள்ளன. பிளேட்டோ, அரிஸ்ட்டாட்டில், ஆதிசங்கரர், புத்தர் போன்ற பல கிரேக்க, இந்திய தத்துவஞானிகள் இதுபற்றிக் கூறியுள்ளனர். நவீன அறிவியலுக்கு முற்பட்ட காலக் கோட்பாடுகள் இறையியலை அடிப்படையாகக் கொண்டவை. அவை ஆன்மாவுக்கும் மனத்துக்குமான தொடர்புகள் பற்றிப் பேசுகின்றன. நவீன கோட்பாடுகள், அறிவியல் அடிப்படையிலான மூளை பற்றிய புரிந்து கொள்ளலின் அடிப்படையில் ஆனவை. இவை மனம் என்பதை உளவியலின் ஒரு தோற்றப்பாடாக நோக்குகின்றன. அத்துடன் இச்சொல் ஏறத்தாழ உணர்வுநிலை (consciousness) என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எந்தெந்த மனித இயல்புக் கூறுகள் மனத்தை உருவாக்குகின்றன என்பதும் பெருமளவில் விவாதிக்கப்பட்ட ஒன்றாகும். சிலர், தர்க்க அறிவு, ஞாபகம் போன்ற உயர்நிலை அறிவுச் செயற்பாடுகள் மட்டுமே மனத்தை உருவாக்குகின்றன என்கின்றனர். இதன்படி, காதல், வெறுப்பு, பயம், களிப்பு போன்ற உணர்வுகள் இயல்பிலும், உருவாக்கத்திலும் மனத்திலிருந்து வேறுபட்டவையாகும். வேறு சிலர், பகுத்தறிவு, உணர்வு சார்ந்த மனித இயல்புகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்தப்பட முடியாதவை என்றும், அவை இரண்டுமே இயல்பிலும், உருவாக்கத்திலும் ஒரே விதமானவை என்றும் ஆதலால், இவையனைத்தும் மனத்தின் பகுதிகளாகவே கொள்ளப்பட வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.
இந்து சமய வேதாந்த சாத்திரங்கள், குறிப்பாக சாங்கிய மெய்யியல் தத்துவங்கள், மனம் நான்கு பணிகள் செய்யும் போது நான்கு பெயர்களில் அழைக்கப்படுகிறதென்பர்; அவையாவன
மனம்:- சந்தேகம் எழும் போது மனதிற்கு மனம் என்ற பெயர் பெறுகிறது. எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாத குழம்பிய மன நிலை மனம் எனப்படுகிறது.
சித்தம்:- பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என வாழ்க்கையில் பெறுகின்ற அனுபவங்கள் அனைத்தும் பதிவுகளால் (சமஸ்காரங்கள்) மனதில் சேமிக்கப்படுகிறது. அந்த சேமிப்பு நிலையமாக திகழம் மனம் சித்தம் எனப்படுகிறது.
புத்தி:- தொலைவில் வருபவன் இராமனா அல்லது கிருட்டிணனா என்று குழம்பிய மனம், சேமிப்பு நிலையமான சித்தத்தில் தொலைவில் வருபவனை இராமன் என்றோ அல்லது கிருட்டிணன் என்றோ ஒப்பிட்டு நோக்குகிறது; சித்தத்தில் ஏற்கனவே இராமனை அல்லது கிருட்டிணனைப் பற்றிய பதிவுகள் இருக்குமானால் அவன் இராமன் அல்லது கிருட்டிணன் என்ற முடிவிற்கு வருகிறது. ஒரு வேளை அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் சித்தத்தில் இல்லாவிட்டால், `அவன் யார் என்று தெரியவில்லை` என்று முடிவு செய்கிறது மனம். இவ்வாறு முடிவு செய்கின்ற மனமே புத்தி ஆகும்.
அகங்காரம்:- மேற்கண்ட மூன்று படிகளின் மூலமாக ஒருவரை அல்லது ஒரு பொருளை அறியும்போது, நான் இராமனை அறிகிறேன், நான் கிருட்டிணனை அறியவில்லை என்று உறுதி செய்கின்ற நான் எனும் உணர்வாகத் (Ego) திகழம்போது மனம் அகங்காரம் எனப்படுகிறது.

English
The part of a person where intellectual functions occur, including cognitive processing, information accumulation, memories, unconscious material, reasoning, emotional reactions, sensory input, and the personality.