mind games
மனதின் விளையாட்டுகள், மன விளையாட்டுகள்
தமிழ் விளக்கம்
1. அடுத்தவர்களை சூழிச்சியாகக் கையாண்டு அவர்களை ஆத்திரமூட்டவோ, கோபப்படவோ, குழப்பவோ, தன்னிடம் பிரியம் ஏற்படும்படியாகவோ நடக்கச் செய்யும் திறனை இகழ்ச்சியாகக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாட்சி. 2. மன விளையாட்டுகள் என்பது மனிதரின் மூன்றுவிதமான நடத்தைப் போக்குகளைக் குறிப்பது - 1. பிரக்ஞையோடு செய்யப்படும் அதிகார விளையாட்டுகள். அதிகாரம் செலுத்த நினைப்பவர் தன்னை உயர்வாக நினைக்கும்படியான தோரணையில் தன்னுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்துவது 2. தாங்கள் உணராமலே, கீழ்மையான செயல்களில் ஈடுபடுவது 3. கடினமான புதிர் விளையாட்டுகளிலும், குறுக்கெழுத்துப் போட்டிகளிலும் (சதுரக்கட்டங்களில் தரப்படும் குறிப்புகளைக் கொண்டு செங்குத்தாகவும் கிடைநிலையாகவும் வெற்றிடங்களில் தக்க எழுத்திடுவதன் மூலம் சொற்களை நிரப்ப வேண்டிய புதிர் முறை) ஈடுபட்டு மன ஆற்றலையும் ஆளுமைத் திறனையும் வளர்க்க உதவும் பயிற்சிகள்.
English
A slang expression usually referring to manipulative behavior, especially involving attempts to provoke feelings of guilt, anger, confusion, or affection.