mind reading

பிறர் மனம் அறிதல்

தமிழ் விளக்கம்

மனதை வாசிப்பதென்பது ஒருவருடன் நேரடித் தொடர்பில்லாமலே அவர் மனதிலிருக்கும் எண்ணங்களை அறியும் திறன். பிறர் மனதை அறிவது என்பது பலபொருள் தரும் சொல்லாடல். 1. அது இணைத்துயர்மை (empathetic occuracy) ஒற்றுணர்ச்சி, மற்றவர் உளமறிந்து செயல்படலைக் குறிக்கும். 2. சேனிலை உணர்வாட்சி (ஐம்புலத் தொடர்பின்றியே தொலைவிலிருப்பவர் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்குந் திறம்) அல்லது மாற்றார் உளமறியும் சிறப்பாற்றலைக் குறிக்கும். 3. நரம்பியலில், பிம்ப நுட்பங்களைப் பயன்படுத்தி மனித மனங்களை அடையாளம் கண்டுணர்தலைக் குறிக்கும். 4. புலனுணர்வு சார்ந்த நடத்தைச் சிகிச்சையில், தன் சந்தேகத்திற்குரிய நபரின் மனவோட்டங்கள் தனக்கெதிராக இரகசியமாகத் திட்டமிடுவாதாக எண்ணி, அதனால் புலனுணர்வுக் குழப்பங்களுக்கு உள்ளாகி மன அமைதி இழப்பது. குடும்பச் சிகிச்சையில் ஈடுபடும் சமூகப்பணியாளர்கள், குறிப்பாக தம்பதிகளில் ஒருவர் அடுத்தவர் செயல்களைப் பார்க்கும் போது, அவரின் மனவோட்டம் தனக்கெதிராக இருப்பதாக நினைத்துப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குவது. இதைச் சந்தேகலங்காரம் அல்லது பிறர் செயலில் தன்னுடைய எண்ணத்தைப் புகுத்திப் பொருள் கொள்ளும் தற்குறிப்பேற்றம் என்றும் கொள்ளலாம்.

English

The alleged ability of a person to know the thoughts and feelings of another person without direct communication. This term is used by social workers as a figure of speech in marital therapy and family therapy to describe the tendency of one family member to interpret or describe to the social worker what he or she believes are the views or the feelings of another family member.