minimal supervision home

(மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான) குறைந்தபட்ச மேற்பார்வை இல்லங்கள்

தமிழ் விளக்கம்

தங்கள் இல்லங்களிலிருந்து வெளியே வாழ முடிந்த, மனநலக் காப்பகத்தில் தங்கத் தேவையில்லாத, தனித்து வாழும் மனநலம் குன்றியவர்களுக்கான இல்லங்கள். இந்த மாதிரியான இல்லங்கள் மாநில அரசுகளின் (அமெரிக்கா) மனித சேவைத் துறையின் மேற்பார்வையில் நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் நடத்தப்படுகிறது. இவ்வில்லங்களுக்கு சமூகப்பணியாளர்கள் திட்டமிட்ட கால அவகாசத்தில் வருகை தந்து, கடைகளுக்குச் செல்லவும், நிதி நிர்வாகம் செய்யவும், பொழுதுபோக்கு உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் கற்றலுக்கு உதவுதல் போன்றவற்றில் ஆலோசனையும் வழிகாட்டுதலும் செய்வர்.

English

A residential facility for people with mental retardation who can live outside of institutions and apart from families but who benefit from scheduled in-home visits by social workers to help them plan their shopping, money management, recreation, health care, and educational activities. These facilities are overseen by state departments of human services and other agencies and are staffed by professionals, case aides, and volunteers.