minimum-needs estimation

குறைந்தபட்சத் தேவைகளை மதிப்பிடுதல்

தமிழ் விளக்கம்

ஒரு மனிதன் உயிர்வாழ்வதற்குத் தேவைபடும் குறைந்த அளவிலான உணவு, உடை, இருப்பிடம், மற்றும் பிறபொருட்களின் தேவையை மதிப்பிட உதவும் கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கமே குறைந்த பட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வருமான வரம்பை நிச்ச்சயிக்கின்றது. இதனடிப்படையிலே வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஒரு அளவுகோளாக வறுமைக் கோடு (Poverty line) தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தை அடையத் தேவையான குறைந்த பட்ச வருமான வரம்பே வறுமைக்கோடு எனப்படுகிறது. வருமானம் தவிர்த்து, ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்தும் வறுமைக் கோடு வரையறுக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வறுமைக் கோடு வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

English

The delineation by social welfare planners of the least quantities of food, clothing, housing, and goods that an individual requires for survival. This concept is used as a basis in establishing an income poverty line.