minimum wage
வாழ்கூலி; வாழ்வூதியம், பிழைப்புமட்டக் கூலி
தமிழ் விளக்கம்
ஒவ்வொரு பிராந்தியத்திலும் அத்தியாவசியம் என்று கருதப்படுகின்ற அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம், சமூக மற்றும் பொழுதுபோக்குச் செலவினங்களை ஈடுசெய்யும் முகமாக பணியாளர்களுக்கு / தொழிலார்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். 1.வாழ்வூதியம் (Living Wages) 2. நியாயமான ஊதியம் (Fair Wages) 3. குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wages) 1. தொழிலாளி தானும் தனது குடும்பத்தினரும் வாழும் வகையில், வெறும் அத்தியாவசிய உணவு, உடை, தங்குமிடம் என்பது மட்டுமில்லாமல், அடிப்படைத் தேவைகளான குழந்தைகளுக்குக் கல்வி, உடல் நலமின்மைக்கான பாதுகாப்பு, அத்தியாவசிய சமூகத் தேவைகள், முதிய வயது உட்பட்ட முக்கிய எதிர்பாராத நிகழ்வுகளைத் தாங்கும் காப்பீடு கொண்டதாக மிக உயர்ந்த மட்டத்திலான ஊதியமே வாழுவதற்கான ஊதியம் என்பதாகும் 2. நியாயமான ஊதியம். தொழிலாளர் உற்பத்தித் திறனோடும் தொழிற்துறையின் ஊதியம் கொடுக்கும் திறனோடும் சம்பந்தப்பட்டது. நியாய ஊதியமானது, குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாகவும் வாழுவதற்கான ஊதியத்தைவிடக் குறைவாகவும் இருப்பது நடைமுறை வழக்கம். 3. குறைந்த பட்ச ஊதியம் 1. குறைந்தபட்ச ஊதியத்தைக் கணக்கிடுவதில், ஒரு சராசரிக் குடும்பத்தில், சம்பாதிக்கும் ஒருவரைச் சார்ந்து மூன்று (2 பெரியவர்கள் + 2 சிரியவர்கள்) நுகர்வோர்கள் இருப்பதாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு குடும்பமானது கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும். பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் வருவாயைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. 2. மிதமான வேலை செய்யும் ஒரு வயது வந்த சராசரி இந்தியருக்கு ஒரு நாளைக்கு 2700 கலோரிகள் உணவு தேவைப்படும் என்ற அடிப்படையில் குறைந்த பட்ச உணவுத் தேவைகள் கணக்கிடப்பட வேண்டும். 3. ஆடைத் தேவைகள், ஒருவருக்கு ஓராண்டிற்கு 18 கஜம் என்ற அடிப்படையில் கணிக்கப்பட வேண்டும். அதனடிப்படையில் நான்கு பேர் கொண்ட ஒரு சராசரி தொழிலாளியின் குடும்பத்திற்கு 72 கஜம் துணி தேவைப்படும். 4. குடியிருப்பைப் பொருத்த மட்டிலும், எந்த ஒரு பகுதியிலும், குறைந்தபட்ச ஊதியப் பிரிவினருக்கு அரசாங்கத்தின் மலிவான தொழிற்சாலை வீட்டுத் திட்டத்தில் வாங்கப்படும் குறைந்தபட்ச வாடகையை நியமமாகக் கொள்ள வேண்டும். 5. எரிபொருள், விளக்கு மற்றும் பிற செலவினத் தேவைகள் மொத்த குறைந்தபட்ச ஊதியத்தில் 20 சதவிகிகமாக இருக்க வேண்டும். இதனடிப்படையில் குறைந்த பட்சக் கூலி நிர்ணயிக்கப்படவேண்டுமென்பது இந்திய நடைமுறை குறைந்த பட்ச ஊதிய சட்டம் 1948ன் படி, நாட்டின் 45 வகை தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இந்தியாவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
English
A payment made to employees that, by law or contract, is the lowest amount the employer is permitted to pay for specified work. U.S. labor policy establishes that employers may not hire workers unless they guarantee to pay at least the amount established by government regulations.