minor

சிறார், அகவை குறைந்த, இளவல், வயது எய்தாதவர், உரிய வயதடையாதவர், முதிரா வயதுடையோர், வயது வராதவர், 21 அகவைக்குட்பட்டவர், பருவமடையாதவர்

தமிழ் விளக்கம்

சிறார் அல்லது சிறுவர்கள் என்போர் சட்டத்தின்படி பருவ வயதை அடையாத சிறுவர்கள். இந்தியாவில் 18 வயதிற்கு உட்பட்டவர்களை சிறுவர்கள் என்று வகைப்படுத்துகின்றனர். இவர்களுக்கும் வயது வந்தவர்களுக்குமிடையே சில உரிமைகளில், பாதுகாப்பு விசயங்களில், சலுகைகளில் வேறுபாடு உள்ளது. இவர்கள் வயதிற்கு வரும்வரை சட்டப்படியான ஒடுக்குநெறிகளைப் (legal restrictions) பின்பற்ற வேண்டும். வாகனம் ஒட்டுவது, சொத்துக்கள் வாங்குவது, மது அருந்துவது, திருமணம் மற்றும் பாலியல் படங்கள் பார்ப்பது போன்றவைகளை இவர்கள் செய்யலாகாது என்று பெரும்பாலான நாடுகள் தடைவிதித்துள்ளன.

English

The legal designation for a child or adolescent, used to distinguish the different rights, protections, and privileges that exist for adults and for these youths. Each jurisdiction establishes the age at which one legally becomes an adult and specifies any rights available to minors, such as driving, buying property, drinking alcoholic beverages, and marrying.