minsei i'in
சமுதாயத் தன்னார்வலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள்
தமிழ் விளக்கம்
சிறுவர்கள் மற்றும் முதியோர்களின் சமூகநலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஜப்பான் நாட்டு சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சகம் மூன்றாண்டு காலத்திற்கு நியமனம் செய்யும் சமுதாயத் தன்னார்வலர்கள். இந்தத் தன்னார்வலர்கள், சமுதாயத்தின் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஆறுதல் சொல்லி, தேவைகளுக்கேற்ற உதவியை எங்கிருந்தெல்லாம் பெறமுடியும் என்பதற்கு வழிகாட்டி, சமூகநலத் துறைக்கும் பிற உதவி ஆதாரங்களுக்கும் தொடர்பாளர்களாகச் செயல்பட்டு, உதவி தேவைப்படுபவர்களின் தகுதியைப் பரிசீலித்து அனுமதி வழங்குதல் போன்ற பல்நோக்கப் பணியாளராகச் செயல்படுவார்.
English
In Japan, the nationwide system of community volunteers, appointed by the Minister of Health and Welfare for three year terms, to help in the administration of welfare problems, especially those concerning children and older people. These individuals try to know about the community's welfare needs, give advice about personal problems, provide information about available resources, act as liaisons with welfare offices and other community resources, and endorse those believed to qualify for public assistance. The system is based on Germany's Elberfeld system.