miscegenation

இனக்கலப்பு, குலக்கலப்பு

தமிழ் விளக்கம்

இருவேறு இனங்கள் / குலங்கள் / ஜாதிகளைச் சேர்ந்தவருக்கிடையே ஏற்படும் திருமணம் மற்றும் பாலுறவையும், அதனால் உண்டாகும் சந்ததியையும் இனக்கலப்பு என்கிறோம். கடந்த காலத்தில் இந்த மாதிரியான இனக்கலப்புகள் சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில், 1960 வரை இனக்கலப்பு சட்டவிரோதமாகக் கருதப்பட்டது. இந்தியாவில் குலக்கலப்பு சட்டவிரோதமில்லையென்றாலும் அதற்கு கடுமையான கலாச்சாரத் தடைகள் இப்பொழுதும் தொடர்கிறது.

English

Marriage or sexual relations between a man and woman of different races in violation of a law. Laws forbidding such marriages were common in the United States but were generally abolished by legislation or court decrees in the 1960s and by the U.S. Supreme Court in 1967.