misfeasance

முறைப்பிழை, முறைகேடாகச் செய்தல், சட்டப்படியான அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்

தமிழ் விளக்கம்

அரசு நிர்வாகத்தில் அதிகாரத்திலுள்ளவர்கள் செய்வதாக வகைப்படுத்தப்பட்டுள்ள மூவகையான தவறுகளில் ஒன்று 1. வேண்டுமென்றே கடமையைச் செய்ய்யத்தவறுதல் (Nonfeasance) 2. கடமையைப் பொருத்தமற்ற முறையெனத் தெரிந்திருந்தும் அதைக் கையாண்டு கடமையாற்றல் (Misfeasance) 3. மக்கள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று தெரிந்திருந்தும் உள்நோக்கோடு அந்த செயலைச் செய்தல் (Malfeasance).

English

Performing a proper act in a way that is harmful or injurious, especially by public officials. See also malfeasance.