mission statement

குறிக்கோள் / இலக்கு அறிக்கை

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனம் அது தோற்றுவிக்கப்படவும், அது தொய்வில்லாமல் நடத்தப்படுவதற்கும் சில இயங்கு நெறிகளை உருவாக்கி வைத்திருக்கும். இந்த இயங்கு நெறிகள் பலபடிகளாக, தொலைநோக்குப் பார்வையாக (vision), அந்தத் தொலைநோக்கை அடைய என்ன இலக்குகளைக் (Mission) கொண்டிருக்கின்றது, அந்த இலக்குகளை அடைய என்ன செயல்திட்டங்கள் (Activities) வைத்திருக்கின்றது, அந்த செயல்களைச் செய்யும்போது கையாளவேண்டிய நெறிமுறைகள் (rules& regulation) வகுக்கப்படும். இலக்கு அறிக்கை என்பது, அவர்களின் தொலைநோக்கை அடைய என்ன செய்ய உத்தேசித்திருக்கின்றார்கள் என்பதைப் பற்றிச் சொல்லும் அறிக்கை.

English

A brief description of an organization's overall goals, direction and purposes, reasons for existence, and operating values, often used to support program review efforts and to inform the public about the focus of the organization.