mobility

அசையும் தன்மை, எளிதில் இயங்கும் தன்மை, இடம் பெயர்வாற்றல், எளிதில் நகரும்தன்மை

தமிழ் விளக்கம்

எளிதாகவும், இயல்பாகவும் நகரும் தன்மை என்று பொருள் கொள்ளப்பட்டாலும், ஒவ்வொரு துறை சார்ந்தும், சூழலைப் பொறுத்து ஆழமான, விரிவான பொருள் தரும் சொல். சமூகவியலில் பலவிதமான நகரும் தன்மைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கிடைமட்டமாக (Horizontal - நகர்தல் (உயர்வு தாழ்வற்று சமூக நிலையை தக்கவைத்து கொள்ளல்), செங்குத்தாக நகர்தல் (Vertical - கீழ்நிலையிலிருந்து மேல்நிலைக்கு நகர்தல்) ஒரு தலைமுறையிலே ஏற்ற இறக்கங்களை அடைதல் (Inter Generational Mobility), ஏற்ற இறக்கங்களைப் பலதலைமுறைகளில் அடைதல் (intra Generational Mobility) போன்ற வகைப்பாடுகள் முக்கியமானவை.

English

The ability to move with relative ease or flexibility. See also social mobility.