Mobilization for Youth
இளைஞர்களுக்காக அணி திரளல், இளைஞர்களைத் திரட்டுதல்
தமிழ் விளக்கம்
நகர்ப்புற ஏழை இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூகத்தடைகளை அகற்றும் போது, அவர்களால் ஒரு சமூகத்தின் மைய நீரோட்டத்தில் இணைய முடியும் என்ற கருத்தைச் செயல்வடிவாக்க, 1960 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தில் தொடங்கப்பட்ட செயல்முறை விளக்க திட்டம். போர்ட் அறக்கட்டளை நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் அமெரிக்க அரசின் நிதி உதவியுடன் இளைஞர்களுக்கு ஆலோசனை, பலவிதமான தொழில் மற்றும் ஆளுமைப் பயிற்சி, தொடர்பாடல்களை எளிமையாக்கும் பயிற்சி, சட்ட உதவி, அரசியல் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு, ஆரோக்கியமான குழு அனுபவங்களுக்கு வாய்ப்பளித்தல், தங்களுடைய குடியிருப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த உதவுதல் போன்ற பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த திட்டம் உருவாக்கிய நல்ல விளைவுகள், ஜனாதிபதி லின்டன் ஜான்சன் முன்னெடுத்த வறுமைக்கு எதிரான போர் திட்டத்தின் பல செயல்பாடுகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
English
A multifaceted social service demonstration program, established in New York City in the early 1960s, designed to test the theory that poor urban youths will enter mainstream society if social barriers to opportunities are removed. Funded at first by the Ford Foundation and later by the federal government, the program provided some direct counseling services but was more oriented toward training; facilitating communication; providing legal, political, and consumer education; developing purposeful and positive group experiences; and changing the neighborhood social structure. The successful results of the program were largely incorporated on a national scale into the War on Poverty programs of the Johnson administration.