model
எடுத்துக்காட்டு, சிற்றுரு, மாதிரிப் படிவம், மாதிரி, உதாரணம், நேரொப்புடையது
தமிழ் விளக்கம்
மாதிரி என்பது பலதுறைகளிலும் பயன்படுத்தப்படும் பொதுச்சொல். எடுத்துக்காட்டாக வணிகத்தில் ஒரு பொருளைப் பிரபலப்படுத்துவதற்காக, மக்களிடம் காட்சிப்பொருளாகத் தோன்ற வைக்கப்படும் பொருளையோ, மனிதர்களையோ மாதிரி என்றழைப்பார்கள். எதார்த்ததைப் பிரதிபலிக்கும் எந்த ஒன்றையும் மாதிரி எனக்கொள்ளலாம். சமூகவியலில் ஒரு கருத்தை இன்னொரு கருத்துடன் ஒப்புமைப்படுத்த, பிரதிநிதிப்படுத்த வைக்கப்படும் அருவமான கருத்துகளையும் மாதிரி அல்லது எடுத்துக்காட்டு என்பர். சமூகப்பணியாளர்கள் தங்கள் பணியில் வாழ்க்கை மாதிரிகளைக் கையாளுவார்கள். வாழ்க்கை மாதிரி என்பது, ஒரு வாடிக்கையாளர் சுற்றுப்புறத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்களும், சுற்றுச்சூழல் அவர்மீது ஏற்படுத்தும் தாக்கங்களையும் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் முறை.
English
A representation of reality. For example, social workers use the life model to represent the interplay of forces found in the client's environment that influence and are influenced by the client.