mongolism

மங்கோலிசம், மனநலிவு நோயைக் குறித்த வழக்கொழிந்த சொல்

தமிழ் விளக்கம்

பார்க்க:- மனநலிவு நோய் - பிறவியில் ஏற்படும் மூளைக்கோளாறு. இக்கோளாறுள்ளவர்கள் தட்டையான முகம், இடைவெளியுள்ள சரிவான கண்கள், சிறிய தலை, தளர்வான மூட்டுகள் போன்ற அடையாளங்களுடன் காணப்படுவர். இது மரபணுவில் கூடுதல் குரோமோசோம் இருப்பதால் ஏற்படுவது. இது மங்கோலிசம் என்ற பெயராலும் அழைக்கப்படும். பெரும்பாலான பிள்ளைகள் பிறப்பில் 23 ஜோடி குரோமோசோம்களை அதாவது நிறமிகளைக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பொதுவாகக் காணப்படும் மனநலிவு நோயில் ஒருவர், 21 வது குரோமோசோமின் வழக்கமான 2 பிரதிகளுக்குப் பதிலாக 3 பிரதிகளைக் கொண்டிருப்பார். கருப்பையில் கரு வளர்ச்சியடையும் மிக ஆரம்ப கட்டத்திலேயே இந்தத் தவறு ஏற்பட்டுவிடுகிறது. மனநலிவு நோய்க்கும் தாயின் முட்டைகளின் வயதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம். மனநலிவுள்ள எல்லாக் குழந்தைகளிலும் மூன்றில் ஒரு பங்கினர் 37 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கே பிறக்கின்றனர்.

English

An obsolete and inappropriate term for Down's syndrome.