monolithic code

வேறுபாடின்றி எங்கும் ஒரு சீராகக் கெட்டிமையாயுள்ள விதிமுறைகள் / தட்டையான விதிகள் / வேறுபாட்டைச் சகிக்காத விதிமுறைகள்

தமிழ் விளக்கம்

பெரும்பான்மையான சமூகம் முன்னிறுத்தும் பழக்க வழக்கங்கள், ஒடுக்கு நெறிகள் (கட்டுப்பாடுகள்) மற்றும் செலுத்து நெறிகள் (guide lines). பெரும்பான்மை சமூகத்தின் நெறிகளை மீறுபவர்கள் பொது நிலையிலிருந்து விலகியவர் / மாறுபட்ட நடத்தையுள்ளவர் என்று முத்திரை குத்தப்படுவார்கள். விவாகரத்து, பெண்கள் வேலைக்குச் செல்லல், புதுமையான தலையலங்காரம், உடையணிதல், வேற்று ஜாதி அல்லது இனத்தவருடன் சகஜமாகப் பழகுதல் போன்றவை முகச் சுழிப்புடன் பார்க்கப்படும்.

English

A belief often held by members of a dominant culture that suggests only one acceptable pattern of behavior and considers any other behavior as deviant. For example, the adherent to this code may consider as deviant such behaviors as divorce, working wives, innovative hair and dress styles, and associating with members of different ethnic or racial groups.