mononucleosis

மோனோநியூக்ளியோசிஸ், முத்த வியாதி

தமிழ் விளக்கம்

முத்த வியாதி என்று மக்கள் வழக்கில் சொல்லப்படும் இந்த நோய்க்கு மோனோநியூக்ளியோசிஸ் (Mononucleosis ) என்று மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர். இபிவி ( Epstein–Barr virus (EBV)) வைரஸ் மூலம் இந்த நோய் பரவுகிறது. முத்தமிடுவதனால் உமிழ்நீர், ஈறுகளில் இருந்து கசியும் ரத்தம் போன்றவைகளின் மூலம் இந்த வைரஸ் கிருமி பிறருக்குப் பரவுகிறது. இளம் வயதினரையும், கல்லூரி மாணவர்களையும் இந்த நோய் அதிகம் பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை இந்த இபிவி வைரஸ் எளிதில் தொற்றும். முதலில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து படிப்படியாக உடலை ஆக்கிரமித்து கிருமிகளைப் பரப்புகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முத்தமிடுவதன் மூலம் ஏற்படும் வைரஸ் தாக்குதலால் உடலில் சக்தி குறைந்து சோர்வான உணர்வு ஏற்படும். ஜீரணசக்தி குறையும். காய்ச்சல் ஏற்படும். வாந்தியும், வயிற்றுவலியும் அதிகரிக்கும். எடைகுறையும், தசைகளில் வலி ஏற்படும். மூக்கில் ரத்தம் வடிதல், தொண்டையில் ரணம், மார்பக வலி, தொடர் இருமல் போன்றவையும் இதன் அறிகுறிகளாகும். ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம் இபிவி வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியலாம்.

English

A viral infection that most commonly affects adolescents and young adults with such symptoms as sore throat, fever, and chills; feelings of weakness and tiredness; and enlarged lymph nodes.