mood
மனப்பாங்கு, மனநிலை, உள உணர்வு
தமிழ் விளக்கம்
மன நிலை என்பது மனிதர்களின் உணர்ச்சிகளின் (எ.கா. வெட்கம், கோபம், மகிழ்ச்சி, சிந்தனை, ஆசை. பொறாமை, வெறுப்பு, விரக்தி, அமைதி, பயம், கவலை, எதிர்பார்ப்பு) மொத்த வெளிப்பாடாகும். அது மனிதர்களின் கண்ணோட்டம், அறிவாற்றல் மற்றும் செயல்பாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. எரிச்சல், உளச்சோர்வு, பதட்டம், கோபம் போன்ற உணர்வுகள் மோசமான மன நிலையின் வெளிப்பாடாகவும், ஊக்கம், மனநிறைவு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் ஆரோக்கியமான மனநிலையையின் வெளிப்பாட்டையும் குறிக்கும். சமூகபணியாளர்களும் பிற மானுட சேவைப் பணியாளர்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களை அமைதியற்று, பதட்டமாக, அதிருப்தியுடனிருப்பதாகவும் (dysphoria) அல்லது நலஉணர்வோடு, மன நிறைவோடு (euphoria) இருப்பதாகக் குறிப்பிடுவதுண்டு.
English
An emotional state that influences an individual's perceptions, cognitive functions, and actions. To be in a "bad mood" is to be irritable, depressed, anxious, or especially, angry. To be in a "good mood" is to be elated, happy, or especially, cheerful. Social workers and other professionals sometimes describe a client as being in a mood of dysphoria or euphoria.