moral citizenship
தார்மீகக் குடிமகன், நல்ல குடிமகன்
தமிழ் விளக்கம்
ஒரு சமுதாயம் மற்றும் சமூக உறுப்பினர் என்ற வகையில் தன்னுடைய உரிமைகள் மற்றும் கடமைகளுக்கான தரத்தை, தன்மையை தீர்மானிக்கும் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்குமுண்டு. அதே நேரத்தில் தனக்கெனத் தீர்மானிக்கும் தரமும், தன்மையும், நோக்கமும், நோக்கவிழைவும் அறவிழுமியங்களுக்கு உட்பட்டதாகாவும், சமூக நன்மை சார்ந்தும் வைத்துக் கொள்வதே தார்மீகக் குடிமகனுக்குரிய அடையாளம். 'சமூகப்பணியாளர்களும் தார்மீகக் குடிமை உணர்வும்' (The Social Worker as Moral Citizen) என்ற கட்டுரையில், மக்கள் விரும்பும் சமூக மாற்றத்தை முன்னெடுக்கும் போதோ, அடக்குமுறை அமைப்புகளை அகற்ற முனையும் போதோ, அது சமூகப்பணி முன்வைக்கும் விழுமியங்களுக்கு ஏற்றதாக இருக்கவேண்டுமென்பது மட்டுமல்ல, அம்மக்களிடம் போதுமான புரிதலையும், அப் புரிதலின் அடிப்படையில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி, மாற்றத்திற்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று சூசன் மானிங்க் (Susan Manning ) என்ற சமூகப்பணியாளர் தன்னுடைய கட்டுரையில் தெரிவிக்கின்றார்.
English
The responsibility to determine standards of ethical behavior as one's right and obligation as a member of the community and society. According to Susan Manning ("The Social Worker as Moral Citizen," Social Work, 42[1997], 223-230), a social worker assumes this responsibility when he or she helps client systems change the structures of oppression to structures more congruent with social work values. The worker regards self-determination and informed consent as paramount obligations to the client.