moralizing
ஒழுக்கத்தை வற்புறுத்தி எழுதுதல் / பேசுதல், நன்னெறி காட்டுதல், நடை சீர்ப்படுத்துதல், நன்னெறிப் பிரசங்கம்
தமிழ் விளக்கம்
ஒருவர் இப்படி எண்ணியிருந்திருக்கலாம் அல்லது நடந்திருக்கலாம் என்று கடமையைச் செய்யவோ அல்லது தவறைச் சுட்டிக்காட்டவோ மிகச் சாதுர்யமாகப் பேசுதல். இந்த மாதிரி அறநெறியாக்குபவர்கள், பெரும்பாலும் குடும்ப கவுரவம், இன அந்தஸ்து, மதநம்பிக்கை போன்ற அருவமான கருத்தாங்களையே முன்வைப்பர். சமூகப் பணியாளர்கள் இந்த மாதிரி அறநெறியாக்களில் ஈடுபட்டால், வாடிக்கையாளர்கள் ஆட்சேபிப்பதோடு மட்டுமல்ல அதைக் காதில் வாங்க மாட்டார்கள்.
English
Communicating a message about how someone should behave or think, often accompanied by manipulative behavior designed to stimulate feelings of guilt or obligation. The moralizer implies that the other person has a duty to some vague higher authority such as "the family honor." Social workers who sometimes moralize with their clients tend to cause resentment and diminished receptivity in them.