morbidity rate

நோய் பாதித்த விகிதம்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் ஒரு நோயால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கணக்கிடும் முறை. இந்த நோய் பாதிப்பு விகிதத்தை மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும், ஆயுள் காப்பீடு நிறுவனங்களும் பயன்படுத்தியே காப்பீட்டுக் கட்டணத்தை நிர்ணயிக்கின்றார்கள்.
பார்க்க: நோய் (வியாதி, பிணி) என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. நோய் பொதுவாக அறிகுறிகள் (signs) மற்றும் உணர்குறிகளுடன் (symptoms) தொடர்புடைய மருத்துவ நிலை எனலாம். நோய் ஏற்படும்போது, நோய்வாய்ப்படும் உயிரினம் சில அசெளகரியங்களை, சீரற்ற நிலையை அல்லது அசாதாரண நிலையை உணர்தல் உணர்குறி என்றும், மருத்துவருக்குத் தெரியக்கூடிய அசாதாரண நிலைகள் அறிகுறிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

English

The proportion of people in a specific population who are known to have a specific disease or disorder during a certain period.